“ஒன்றரை வயது குழந்தையை” வாசுதேவராக தலையில்  சுமந்து  காப்பாற்றிய காவலர் !!..

குஜராத்தில்  உதவி ஆய்வாளர் ஒருவர்  கழுத்தளவு  வெள்ளத்தில்  பச்சிளங்குழந்தையை  தலையில்  சுமந்து  சென்று  காப்பாற்றியது   பலரது  பாராட்டுகளையும்  பெற்றுள்ளது .

கடந்த  சில  நாட்களாக குஜராத்  மாநிலம்  வதோதராவில்  பெய்துவரும்  கனமழை காரணமாக  அப்பகுதியில்  வெள்ளம்  சூழ்ந்துள்ளது . வெள்ளத்தில்  சிக்கியிருந்த  மக்களை   மீட்கும் பணியில்  மீட்புபடையினர்  ஈடுபட்டு  வருகின்றனர் .  இந்நிலையில்  விஸ்வாமித்திரி ரயில் நிலையம் அருகில்    உள்ள  தேவி புரா  பகுதியில்  காவல்துறை  உதவி  ஆய்வாளர்   கோவிந்த்  சாவ்தா   கழுத்தளவு  தண்ணீரில்  இறங்கி பச்சிளங்குழந்தையை தலையில்  சுமந்து  சென்று காப்பாற்றியுள்ளார் .

இது  குறித்து  கூறிய  கோவிந்த், தாயும் குழந்தையும்   வெள்ளத்தில்  சிக்கியிருந்ததாகவும்  தாய் நடக்க  சிரமப்படதால்  தான்  ஒரு  சிறிய  கூடையில்  குழந்தையை  தலையில்  சுமந்து  கொண்டு  வந்ததாக  தெரிவித்தார் .இச்செயலை  கண்ட  காவலர்கள் அனைவரும் பாராட்டினர்.  மேலும் ” ஸ்ரீ கிருஷ்ணரை  வாசுதேவர் ” தலையில்  சுமந்து  சென்ற  புராணத்தை  ஓப்பிட்டு  சமூக    வலைத்தளங்களில்  பாராட்டுகள்  குவிந்து  வருகின்றன .