நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் பலரும் டிஜிட்டல் முறையிலான செயல்பாடுகளை தான் பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு பக்கம் நன்மைகள் இருந்தாலும் மறுபக்கம் மோசடி சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. டிஜிட்டல் முறையிலான சைபர் குற்றங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அரசு பலமுறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, யாரேனும் லிங்கை அனுப்பி அதனை கிளிக் செய்ய சொன்னால் அதில் அதிக ஆபத்து உள்ளது என்று அர்த்தம். இது போன்ற விஷயங்களை தவிர்த்து விடுங்கள் என்று மக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.