ஒடுங்க ஒடுங்க பிரியாணி…. ஆசைகாட்டி மோசம் செய்த 5 பைசா பிரியாணி…!!!

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக கடை சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் பழைய செல்லாத ஐந்து பைசா 5 பைசா கொண்டு வருபவர்களுக்கு வேறு எந்த கட்டணமும் இல்லாமல் இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று மக்கள் கடையின் முன்பு 5 பைசாவை வைத்துக் கொண்டு பிரியாணி வாங்குவதற்கு கூட்டமாக கூடியுள்ளனர்.

5 பைசாவுக்கு இலவசமாக பிரியாணி கிடைப்பதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை மறந்து கடை முன்பு கூட்டம் கூடியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடை உரிமையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் கடையை இழுத்து மூடியுள்ளனர். இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து கூட்டநெரிசலில் போக்குவதற்காக கூட்டமாக இருந் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *