ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்..

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். கடந்த 2ஆம் தேதி பயணிகளை ஏற்றிச் சென்ற 2 அதிவேக ரயில்கள் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் 275 பேர் உயிரிழந்தனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தற்போது பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த இடம் வழக்கம் போல் ரயில் இயக்கப்படும்.

இந்நிலையில் சேவாக் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தப் புகைப்படம் நீண்ட காலத்திற்கு நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த துயரமான நேரத்தில், ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வியை கவனித்து கொள்வது மட்டுமே என்னால் முடியும். சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் இந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவேன்.

மேலும், மீட்பு பணிகளில் முன்னணியில் இருந்த அனைத்து துணிச்சலான ஆண்கள், பெண்கள் மற்றும் தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் மருத்துவ குழு மற்றும் தன்னார்வலர்கள் என அனைவருக்கும் தலைவணங்குகிறேன். இதில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம்” என்று  ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.