ஒடிசாவில் உள்ள பஹுநாகா ரயில் நிலையத்தில் பயங்கர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 278 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசுப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. பிண குவியல்களுடன் அரசுப் பள்ளி சவக்கிடங்காக மாறியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர்களில் அவர்களின் உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதை அறிய மக்கள் பள்ளியில் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டன.