ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதிகாரிகளிடமும், மருத்துவர்களிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார். பின்னர் கட்டாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களிடம் பிரதமர் மோடி நேரில் நலம் விசாரித்தார்.

இதையடுத்து பேசிய பிரதமர், இந்த விபத்து சம்பவம் நெஞ்சையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வழங்க மத்திய அரசு உதவும், விபத்துக்கான காரணம் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.