ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது ஒரு சிலர் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் பலரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுடன் சிறப்பு ரயில் இன்று காலை 4.30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. இந்நிலையில் விபத்தில் லேசான காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்து தவிர கடந்த 20 ஆண்டுகளில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மூன்று முறை விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.