ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 294 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து ரயில்வே வாரியம் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ரயில்வே வாரியம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இந்த பயங்கர விபத்து மனித தவறால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரணையில் தெரியவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.