இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஐ-போன் மற்றும் ஐ-பாட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எளிதில் பைபாஸ் செய்து தகர்க்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் பல ஆப்பிள் மென்பொருள்கள் மற்றும் ஓஎஸ்-கள் கொண்ட சாதனங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது.