ஐஸ்வர்யா தனுஷ் பிரிவுக்கு இது தான் முக்கிய காரணம்…! ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்….!!!

ரஜினியின் பேச்சைக் கேட்காமல் தனுஷ் போயஸ் கார்டனில் வீடு கட்டி வருவது தான் விவாகரத்துக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு முன்னர் ரஜினி அவர்களுடைய பிள்ளைகளான யாத்ரா மற்றும் லிங்கா உடன் அதிக நேரத்தை செலவிட விரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் தனது வீட்டிற்கு அருகிலேயே வீடு கட்டுமாறு தனுஷிடம் கூறியுள்ளார் ரஜினி . இதனைத் தொடர்ந்து தனுஷ் அந்தப்பகுதியில் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்ட தொடங்கியுள்ளார்.

அந்த இடம் வாஸ்து சரியில்லாமல் இருப்பதாக ரஜினி பலமுறை கூறியதாகவும், அதனை தனுஷ் கேட்க மறுத்து தொடர்ந்து அந்த பகுதியில் வீடு கட்டும் பணியை தனுஷ் மும்முரமாக செய்து வந்ததாகவும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தொடர்ந்து ரஜினியின் பேச்சை கேட்காமல் தனுஷ் அந்த பகுதியில் வீடு கட்டும் வேலையை மும்மரமாக செய்ததே பிரச்சனைக்கு காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *