சென்னையை அடுத்துள்ள நந்திவரம் கூடுவாஞ்சேரி அப்துல்லா தெருவை சேர்ந்தவர் சூர்யா(20) என்ற பெண். இவர் தன்னுடைய ஒரு வயது ஆண் குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது வீட்டில் போர்டிகோவில் இருந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.

அதில் ஒரு வயது ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த தாய் சூர்யா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.