இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. பொதுவாக ரீல்ஸ் வீடியோக்கள் மட்டும் இன்றி நாட்டில் நடக்கும் பலதரப்பட்ட விஷயங்கள் கூட தற்போது வீடியோவாக வெளிவந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்த ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமாக அமைந்துள்ளது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் மண்ணஞ்சேரி இந்திரா சந்திப்பு-திரிவேணி சாலை உள்ளது. இங்குள்ள ஒரு துணிக்கடைக்கு சம்பவ நாளில் கணவன் மனைவி இருவர் சென்றுள்ளனர். அந்த கடையின் முன்பாக உள்ள கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கணவன் அதை தாண்டிய நிலையில் மனைவி தாண்ட முயற்சித்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால்வாயில் விழுந்துவிட்டார். அந்தப் பெண் மரபலகை உடைந்து கால்வாய்க்குள் விழுந்த நிலையில் உடனடியாக அந்த பெண்ணின் கணவரும் அக்கம் பக்கத்தினரும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதிர்ஷ்டவசமாக தாய் சேய் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ வைரலாகி வரும் நிலையில் மறுபுறம் இரும்பு கம்பிகள் இருப்பதால் ஒருவேளை அந்த பக்கம்விழுந்திருந்தால் கர்ப்பிணி பெண்ணின் நிலைமை என்னவாகும் என்று வேதனை தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள மந்திரி உத்தரவிட்டுள்ளார்.