தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே நாகேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அவரை மீட்ட சுற்றி இருந்தவர்கள் ஏன் இந்த முடிவு என்று கேட்டுள்ளனர்.

அதற்கு, என்னுடைய மனைவி தினமும் என்னை அடிக்கிறாள், என்னால் வலி தாங்க முடியவில்லை, மேலும் தினமும் சித்திரவதை செய்கிறாள், நான் பெற்ற குழந்தைகளை பார்க்க அனுமதிக்காமல் நான் இறந்து விட்டதாக அவர்களிடம் கூறுகிறாள், எனவே எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று அழுது புலம்பியுள்ளார்.