கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி குப்பம் காவல் நிலையத்தில் மேரி ஸ்டெல்லா என்பவர் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்க்கிறார். இன்று காலை பணி நிமித்தமாக மேரி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார் வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ஏலகிரி விரைவு ரயிலில் சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் மேரி மீது மோதியது. இதனால் படுகாயம் அடைந்த மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மேரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.