ஐபிஎல் வீரார்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது…. பிசிசிஐ உத்தரவு…!!!

உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகங்கள் எந்த வீரருக்கும் கொரோனா தடுப்பூசி போட கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான தனிப்பிரிவு ஒதுக்கவில்லை என்பதால் தடுப்பூசி போட கூடாது ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறியுள்ளது.