“ஐபிஎல் வரலாற்றில் தன்னலமற்ற வீரர் எம்.எஸ் தோனி தான்”…. வீரர்கள் கருத்து….!!

ஐபிஎல் வரலாற்றில் தன்னலமற்ற வீரர் எம்.எஸ் தோனி தான் என்று வீரர்கள் கூறியுள்ளனர்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆற்றிய  பங்கு அளப்பரியது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வில் இருந்து வரும் டோனி ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தி வருகிறார். இதுவே அவரது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தங்கள் நாட்டு இள வீரர்களுக்கு மட்டுமின்றி பிற நாட்டு இளம் வீரர்களுக்கும் விளையாட்டு நுணுக்கங்களையும் அறிவுரைகளையும் அவ்வப்போது வழங்கி வருகிறார். களத்தில் சக வீரர்களுடன் சகஜமாக பழகி வரும் தோனிக்கு உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இப்படி தோனியை பற்றி நிறைய சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் தன்னலமற்ற வீரர் எம்எஸ் தோனி தான் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் வீரர்கள் கூறியுள்ளனர். மேலும் எம்.எஸ் தோனி தான் தன்னலமற்ற வீரர் என்று க்றிஸ் கெயில், உத்தப்பா, கும்ப்ளே, ஸ்காட்‌ டைரிஸ் போன்ற வீரர்கள் கூறியுள்ளனர்.