ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெற இருந்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையிலான லீக் போட்டி ஏப்ரல் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. நாடு முழுவதும் ஏப்ரல் 17ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதனால் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டி ஒரு நாள் முன்கூட்டியே நடத்தப்படுகிறது. அதனைப் போலவே ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற இருந்த குஜராத் மற்றும் டெல்லி இடையிலான லீக் போட்டி ஏப்ரல் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.