ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் பட்லர் சதம் அடித்ததால் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 2 கிரிக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பட்லரின் சதம் ஐபிஎல் தொடரில் அவருடைய 7-வது சதமாக பதிவானது. இதனால் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்லர் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக 6 சதங்களுடன் க்ரிஸ் கெயில் 2-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது அவரை முந்தி பட்லர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் இந்த பட்டியலில் 8 சதங்களுடன் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார்.