ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை…. தொந்தரவு செய்தவர்கள் யார்…?? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சீனிவாசராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐடி ஊழியரான நரேந்திரன்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை சீனிவாசராஜா தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நரேந்திரனை அவரது பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை ஏற்காததால் நரேந்திரனின் மாமாவிடம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளனர். அவர் வீட்டிற்கு சென்று நீண்ட நேரமாகியும் கதவை தட்டியும் நரேந்திரன் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த நரேந்திரனின் மாமா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது நரேந்திரன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அவரது மாமா அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நரேந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு ஆன்லைன் கடன் செயலிகளில் நரேந்திரன் கடன் வாங்கியது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த செயலிகளை சேர்ந்தவர்கள் கடனை திரும்ப தர வலியுறுத்தி அடிக்கடி செல்போன் மூலம் நரேந்திரனுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். அவர் செல்போனை எடுக்காவிட்டால் உறவினர்களின் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டு வாங்கிய கடனை திரும்ப தருமாறு தொந்தரவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் நரேந்திரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.