சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்காக ஜூன் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது . ஆசிரியர் தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.