தமிழகத்தில் தொழில் பயிற்சி நிலையங்களில் ITI படிப்பவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் ITIபயின்ற மாணவர்கள் ஜனவரி 3ஆம் தேதி வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. எனவே இன்றே கடைசி நாள் என்பதால் மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.