ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் தன்னுடைய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது இந்தியா வெற்றி பெற்ற நிலையில்  கேப்டனாக ரோகித் சர்மாவின்  17-வது வெற்றியாக கருதப்பட்டது.

இதன் மூலம் அதிக வெற்றிகள் பெற்ற இந்திய கேப்டன்கள் சாதனை பட்டியலில் ரோகித் சர்மா கங்குலியை முந்தி 2-ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 58 போட்டிகளில் விளையாடிய  எம்.எஸ் தோனி 41 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதன் பிறகு 20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 17 வெற்றிகளுடன் 2-ம் இடத்திலும், 22 போட்டிகளில் விளையாடிய கங்குலி 16 வெற்றிகளுடன் 3-ம் இடத்திலும் இருக்கிறார்கள். மேலும் 19 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 13 வெற்றிகளுடன் 4-ம் இடத்தில் இருக்கிறார்.