ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்…. விராட் கோலி, ரோகித் சர்மா பின்னடைவு….!!!!

முதல் ஒருநாள் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்களின் கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் தற்போதைய  கேப்டனான ரோகித் சர்மா 754 புள்ளிகள் எடுத்து 7வது  இடத்திலிருந்து 8-வது இடத்திலும் முன்னாள் கேப்டனான விராட் கோலி 742 புள்ளிகள் எடுத்து 9-வது இடத்திலிருந்து 10 வது இடத்திலும் தள்ளப்பட்டுள்ளார்கள். இதை அடுத்து இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 2வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் கவாஜா 6 இடங்கள் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் தமிழக வீரரான அஸ்வின் 850 புள்ளிகள் எடுத்து 2வது இடத்திலும் பும்ரா 830புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தில்  இருக்கின்றனர். ஒருநாள் போட்டிக்கான தர வரிசையில் விராட்கோலி 811 புள்ளிகளும் எடுத்து 2வது இடத்திலும் ரோகித் சர்மா 791 புள்ளிகள் எடுத்து  5-வது இடத்திலும் இருந்து 4வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலிடத்தில் தொடர்கிறார். பந்துவீச்சாளர்களில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மட்டுமே இடம் பெற்றுள்ளார். வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷகீப் அல் ஹசன் 4 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *