இதுக்குத்தான் அங்கு நின்றேன்… அதுக்குள்ள நீங்க பிடிச்சிட்டிங்க… வசமாக சிக்கிய வாலிபர்…!!

சேலம் மாவட்டத்தில் ஏ.டி.எம்மில் கொள்ளை செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள மும்முடி சாலையில் ஏ.டி.எம் மையம் ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம்  மையத்தில் சந்தேகப்படும் படியாக ஒரு நபர் நீண்ட நேரம் அங்கு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த ஏ.டி.எம்மில்  பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் இவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்த  காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம்  விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது அவர் சதாசிவபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பதும், தனியார் ஏ.டி.எம் கொள்ளையடிக்க முயற்சி செய்வதாவும் காவல் துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.