ஏர் இந்தியாவின் அதிரடி அறிவிப்பு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!!

புதிய கொரோனா வைரஸால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி விமான சேவை முதல் பேருந்து சேவை வரை அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற, அனைத்து சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த அவருக்கு புதிய கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி பிரிட்டன், ஓமன் மற்றும் சவுதி அரேபியா விமானங்களில் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், அடுத்த ஆண்டு 2021 டிசம்பர் 31-க்குள் பயணம் செய்து கொள்ளலாம் என அறிந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முன்பதிவு செய்த பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.