உலகில் உள்ள 184 நாடுகளில் பயன்படுத்தும் வகையில் சர்வதேச ரோமிங் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிற நாடுகளுக்கு செல்வோர் வசதிக்காக ஒரு நாளைக்கு 133 முதல் 2998 ரூபாய் வரை பயணத்தின் கால அளவை பொறுத்து திட்டங்களை தேர்வு செய்யலாம். எந்த நாட்டுக்கு சென்றாலும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமாக இந்த ரீசார்ஜ் திட்டத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.