ஏர்டெல் பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இந்த ரீசார்ஜ் திட்டம் கிடையாது…. புதிய கட்டண உயர்வு அமல்….!!!!

அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் அவ்வபோது பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கான குறைந்தபட்ச கட்டணத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் தற்போது 57 சதவீதம் உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் 99 ரூபாயிலிருந்து 155 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய இரண்டு மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் விரைவில் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த 155 ரூபாய் திட்டத்தில் வேலிடிட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 28 நாட்கள் வழங்கப்பட்ட இது தற்போது 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.