தஞ்சாவூர் மாவடத்திலுள்ள பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாரனேரி கிராமத்தில் அய்யனார் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலமாக மாரனேரி பகுதியில் 600 ஏக்கருக்கு மேல் விலை நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் அய்யனார் ஏரிக்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு அதிலிருந்து சிறுகால்வாய்கள் மூலமாக பாசனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அய்யனார் ஏரியில் நீர் பிடிப்பு பகுதி முழுவதும் ஆகாயத்தாமரைச் செடிகள் நீரே தெரியாத அளவிற்கு படர்ந்து இருக்கிறது.

மேலும் ஆகாயத்தாமரை செடிகள் சிறிதளவு இல்லாத இடத்தில் ஆடு மாடுகளை குளிப்பாட்டும் இடமாகவும், வயல்களில் வேலை செய்யும் பணியாளர்கள் கை, கால்கள் கழுவும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் சம்பா சாகுபடி நிறைவடைந்து அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் ஏரியில் படர்ந்து இருக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி மீண்டும் இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் வளராத அளவிற்கு ரசாயன மருந்துகளை செலுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.