ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பேரி ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த பரிதாபானு(30) என்பது தெரியவந்தது. மண்நலம் பாதிக்கப்பட்ட பானு அவரது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பானு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அதன் பிறகு அவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *