திருவள்ளூர் மாவட்டம் கோளூர் கிராமத்தில், பிரபல நடிகை தென்றல் சாந்தி மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக பொன்னேரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 27 வயதான தென்றல் சாந்தி, சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் என்பதால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி ஜெயந்தி தினத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால், மாவட்ட போலீஸ் எஸ்பி பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். இந்நிலையில், கோளூர் பகுதியில் மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, பொன்னேரி போலீசார் சிறப்பு சோதனை மேற்கொண்டு தென்றல் சாந்தியை கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.