நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுவதால் அன்றைய தினம் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். மேலும் இதை முன்னிட்டு அன்றைய நாளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.