ஏப்.15-க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டுக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் முதல் அரையாண்டுக்குள் பழைய சொத்து வரியை பொதுமக்கள் செலுத்தினால் அவர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். சொத்து வரி மறு சீரமைப்பு செய்து இரண்டாவது அரையாண்டில் புது சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மக்கள் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *