ஏப்ரல்-9 ஆம் தேதி முதல் ஊரடங்கு…? – அதிரடி பேட்டி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால் அந்த தகவல் உண்மை இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை, கோயில்கள், தியேட்டர்கள் மூடப்படும் ஆகிய செய்திகள் பரவி வருவதாகவும் கூறினார்.