ஏப்ரல் 5ஆம் தேதி முதல்…” காலவரையற்ற போராட்டம்”… லாரி உரிமையாளர்கள் அதிரடி..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்க தலைவர்கள் சென்னா ரெட்டி, பெங்களூரு மாநகர சங்க தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் நிபுணர்களிடம் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மட்டுமே சாலையில் வாகனங்களை இயக்க முடியும். ஆர்டிஓ சான்றிதழ் பெறாமல் இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.

15 ஆண்டுகள் இயங்கிய வாகனங்களை இயக்க கூடாது என்று சட்டம் கொண்டு வருவது என்ன ஞாயம்? என்று அவர் தெரிவித்தார். சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளதால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவற்றை குறைக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *