ஏப்ரல்-30 ஆம் தேதி வரை…. ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்திவைப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாசிக் நாணய பாதுகாப்பு பதிப்பகம் மற்றும் இந்திய பாதுகாப்பு பதிப்பகத்தின் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புழக்கத்தில் விடப்படும் ரூபாய் நோட்டுகளில் 40% நாசிக்கில் அச்சிடப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *