மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும், விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு எச்சரித்துள்ளார். ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை இல்லை என நிறுவனங்கள் கூறினால் 1950 என்ற எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம் எனவும் இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது