ஏண்டா ஸ்கூலுக்கு வரல…. பிரம்பால் அடித்து காலால் எட்டி உதைத்த ஆசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூரை சேர்ந்த மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவரை வகுப்புக்கு வரவில்லை என்ற காரணத்தால் மாணவரை முட்டி போட வைத்து, இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணி என்பவர், பிரம்பால் கடுமையாக அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல்  அந்த மாணவரை ஆசிரியர் தனது கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதையடுத்து அந்தக் காட்சி சக மாணவர்களால் படம் பிடிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட மாணவர் அளித்துள்ள புகாரின் பேரில், சிறுவர்களுக்கு எதிரான குற்றம் போன்ற 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *