மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் ராஜு மதுரை மாநகராட்சியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டத்தை பார்வையிட்டார். அப்போது வேலைகள் எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்டார். மழை பெய்தால் பணிகள் தாமதம் ஆவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உடனே செல்லூர் ராஜு மழை பெய்யத்தான் செய்யும். அப்புறம் மதுரை முழுக்க தார்பாய் போட்டு மூடி விடலாமா என சற்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் 20 நாட்களாக சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது.

ஏன் அமைச்சர்கள் இங்கு வந்து பார்க்கவில்லை. தொற்றுநோய் பரவ தொடங்கியுள்ளது. அதிகாரிகள் எல்லாம் அலட்சியமாக இருக்கின்றனர். கேட்டால் பணம் இல்லை என கூறுகிறார்கள். முதல் அமைச்சர் பொதுப்பணித்துறைக்கு 11 கோடி ஒதுக்கியதாக தெரிவித்தார். எப்படியும் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பார். அதிகாரிகள் மதுரை பாதாள சாக்கடை பற்றி கூறியிருப்பர். அப்படி இருந்து பணிகள் தாமதமாக தான் நடக்கிறது. திமுக அரசும் கூட்டணி பலம் இருக்கிறது என பெயருக்கு செயல்பட்டு வருகிறது. இவர்கள் கூட்டணி எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என் கூறியுள்ளார்.