தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜனவரி 11-ஆம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்குப் பிறகு ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் ஏகே 62 திரைப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது முதலில் நயன்தாரா படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கதாநாயகிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் ஏகே 62 திரைப்படத்திலிருந்து நயன்தாரா விலகியதாக கூறப்பட்டது. அதன் பிறகு ஏகே 62 திரைப்படத்தில் திரிஷா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் திரிஷாவும் விலகி விட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விவேகம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் தான் ஏகே 62 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.