எஸ்.புதூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகைச் செடிகள்… அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரவீன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மூலிகை செடிகள் தொகுப்பாக வழங்கப்படுகிறது. அதில் பத்து வகையான மூலிகை செடிகள் தலா இரண்டு வீதமும், செடி வளர்ப்பு பைகள் 10, மண்புழு உரம் 4 கிலோ, தொழில்நுட்ப கையேடு உள்ளிட்ட தொகுப்பிற்கு 50 சதவீத மானியத்தில் ரூபாய் 250-க்கு வழங்கப்படுகிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் ஆதார் நகல், போட்டோ போன்றவற்றுடன் எஸ்.புதூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.