இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த வங்கி அரசால் நடத்தப்படுவது மட்டுமல்லாமல் அரசின் வரவு செலவு கணக்குகளும் இந்த வங்கியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த வங்கியில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் எஸ்பிஐயில் வழங்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமாக திட்டத்தின் முதிர்வில் உங்களுக்கு சிறந்த வருமானம் கிடைக்கிறது.

அதாவது கடந்த ஐந்து வருடங்களில் எஸ்பிஐ ஸ்மால் கேப்  ஃபண்ட், எஸ்பிஐ கார்டு கான்ட்ரா ஃபண்ட் மற்றும் எஸ்பிஐ தொழில்நுட்ப வாய்ப்புகள் நிதி போன்ற மியூச்சுவல் பண்டுகளின் வருடாந்திர வருமானம் 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த திட்டத்தில் மாதம் ரூ.12,000 முதலீடு செய்திருந்தால் 84.47 சதவீதம் வருமானம் மூலமாக உங்களுக்கு ஐந்து வருடங்களில் மொத்தமாக ரூ.7.2 லட்சம் கிடைக்கிறது. அதேபோல் sbi கான்ட்ரா ஃபண்ட் 5 ஆண்டு காலத்தில் 95.16 சதவீதம் மற்றும் வருடாந்திர வருமானம் 14.3% கிடைக்கிறது. இந்த நிறுவனத்தின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.241.69 கோடியாகும். அதனால் ஐந்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் எஸ்பிஐ கான்ட்ரா பண்டில் மாதம் ரூ.12,000 முதலீடு செய்திருந்தால் 79.31% வருமானம் மூலமாக 5 வருடங்களில் உங்களுக்கு மொத்தமாக ரூ.7.2 லட்சம் கிடைக்கிறது.