ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் SBI வாடிக்கையாளர்கள், இணைய வங்கி குறித்த பரிவர்த்தனைகள், செயல்பாடுகளுக்கு OTPஐ உருவாக்க பாதுகாப்பான OTP செயலியை பயன்படுத்தலாம். இச்செயலி Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும்.
SBI பாதுகாப்பான OTP செயலியில் பதிவுசெய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எஸ்பிஐ Secure OTP செயலியை பதிவிறக்கம் செய்து அதை திறக்க வேண்டும். பின் எஸ்பிஐ Secure OTP செயலியில் பதிவுசெய்வதற்கு SIM-1 (அ) SIM-2ஐ தேர்வுசெய்யவும். மொபைல் எண்ணை சரிபார்க்க மொபைலிலிருந்து sms அனுப்புவது தொடர்பான செய்தி திரையில் காண்பிக்கப்படும். பின் Continue பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதோடு ஒரு தனிப்பட்ட குறியீட்டை கொண்ட sms முன் வரையறுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும்.
கடவுச்சொல்லை உள்ளிட்டு Continue-வை கிளிக்செய்ய வேண்டும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க தேர்வுப் பெட்டியில் டிக் செய்து, OK பட்டனைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்டு சரிபார்ப்புக்கு பின் SBI SecureOTP செயலியின் MPINஐ அமைப்பதற்கு பயனரிடம் கோரிக்கை வைக்கப்படும். இதையடுத்து பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆக்டிவேஷன் கோட் அனுப்பப்படும். அந்த கோட் 10 நிமிடங்கள் வரையும் செல்லுபடியாகும். Online SBIல் உள் நுழைந்து ஆக்டிவேஷனை முடிக்கவேண்டும்.