எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. புதிய பாதுகாப்பு சேவை அறிமுகம்…. உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்களில் இருந்து தனது பயனாளர்களை பாதுகாக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் போது அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு ஓடிபி அனுப்பப்படும். இந்த odp யை உள்ளிடுவது, தொடர்புடைய பரிவர்த்தனைகளை நிறைவு செய்யும்.

மேலும் இன்டர்நெட் பேங்கிங் சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் சுயவிவர பிரிவில் உள்ள உயர் பாதுகாப்பு விருப்பங்களில் இருந்து இந்த சேவையை செயல்படுத்தலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதேசமயம் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு இந்த வசதியை செயல்படுத்துமாறு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.