எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் sbi அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு பயன்படுத்துபவருக்கும் எஸ்பிஐ வங்கி மீண்டும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அவ்வகையில் எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது சாதாரண கிரெடிட் கார்டுக்கான சர்வீஸ் கட்டணம் ஆண்டுக்கு 99 ரூபாயிலிருந்து 199 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து அதற்கான வரியையும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பினை வாடிக்கையாளர்களுக்கு இமெயில் மூலம் வங்கி தெரியப்படுத்தி உள்ளது.

Leave a Reply