“எவ்வளவு கீழ இறங்க முடியுமோ, அவ்வளவு இறங்கி பாக்குறீங்க” திருத்தவே முடியாது…. நடிகர் சாந்தனு திடீர் அதிரடி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கே. பாக்யராஜ். இவர் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர் நாசரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் பாக்யராஜ் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். அதன்பின் சமீபத்தில் நடந்த திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் நடிகர் பாக்யராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தோல்வி அடைந்ததால் அவர் சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவதாக அவருக்கு நடிகர் விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு நடிகர் பாக்யராஜ் ஏற்றுக்கொள்ளத்தக்க பதிலை கூற வேண்டும் எனவும் நடிகர் விஷால் கூறியிருந்தார்.

ஆனால் திடீரென நடிகர் பாக்யராஜ் நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இவரோடு சேர்த்து நடிகர் உதயாவையும் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். இதற்கு நடிகர் உதயா எதிர்ப்பு தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அவர் கூறியதாவது, தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படுபவர் நடிகர் பாக்யராஜ். அப்படிப்பட்ட நபரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த தேர்தலில் அவர் போட்டியிட்டார் என்பதற்காக மட்டுமே அவரை நீக்கியுள்ளனர். கூடவே என்னையும் சேர்த்து நீக்கியுள்ளனர்.

இது ஒரு பழி வாங்கும் செயல். கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் நீக்குகிறார்கள். இப்படி உறுப்பினர்களை நீக்குவது எதற்குமே தீர்வாகாது என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இயக்குனர் பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனு தற்போது தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எவ்வளவு கீழே இறங்க முடியுமா அவ்வளவு இறங்கி பாக்குறீங்க. உங்கள திருத்தவே முடியாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் சாந்தனுவின் பதிவு நடிகர் சங்கத்தை மறைமுகமாக கண்டித்து வெளியிட்டதாக கூறப்படுகிறது.