எல்லோரும் கட்டாயமா இத போட்டுட்டு போங்க…. 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம்…. ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாக்குச்சாவடிக்கு முன்பாக வட்டங்கள் போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ராணிப்பேட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்பு வட்டங்கள் போடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து வாக்களிக்க வரும் பொதுமக்கள் அவ்விடத்தில் வரிசையாக நின்று வாக்கினைப் போடும்படி மாவட்ட கலெக்டரான கிளான்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் அனைத்து மக்களும் வாக்களிக்க செல்லும்போது முக கவசம் கட்டாயமாக அணிந்து செல்ல வேண்டும் என்றார். இதனிடையே பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.