எல்லைகளை மூடிட்டாங்க…. உணவுப்பொருட்கள் கிடைக்காது…. வெளியான எச்சரிக்கை தகவல்…..!!

பிரான்ஸ், பிரிட்டனுடன் உள்ள எல்லைகளை மூடியுள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது.  

லண்டனின் பல இடங்களில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பிரிட்டனின் பல பகுதிகளில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் தங்கள் நாட்டிற்கும் கொரோனா நுழைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நேற்று இரவில் பிரிட்டன் உடனான தங்கள் எல்லைகளை அடைத்துவிட்டது. இதனால் பண்டிகை நாட்களில் பிரிட்டனிற்கு கொண்டுவரப்படும் உணவு பொருட்களுக்கு தடை ஏற்படும் என்று உணவுத்துறை எச்சரித்துள்ளது.

மேலும் குறிப்பாக சாலட் செய்ய பயன்படும் கீரைகள் ஆரஞ்சு பழங்கள் பிரக்கோலி மற்றும் காலிபிளவர் போன்ற உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு உண்டாகும் எனவும் எச்சரித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பிரிட்டன் மக்கள் அதிகாலை முதலே தங்களுக்கு தேவையான  உணவு பொருட்களை வாங்குவதற்காக கடைகள் முன்பு குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் கடைகள் திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே பொருட்கள் காலியாகி உள்ளது.