எல்லா படமும் வெளியாகணும்…. அப்புறம் தான் கல்யாணம்…. பிரபல நடிகையின் முடிவு….!!

பிரபல நடிகை ஒருவர் தான் நடித்த படங்கள் வெளியாகாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகை என்று பெயர் பெற்று வரும் இவர் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். வயது அதிகரித்தாலும் அவருக்கு வரும் வாய்ப்புகள் குறையவில்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அந்த நடிகை தனது வயதை மறந்து திருமணத்தை தவிர்த்துக் கொண்டே செல்கிறார்.

அவரது குடும்பத்தினர்கள் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதற்கு பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததோடு தான் நடித்து வெளியாகாமல் இருக்கும் படங்கள் மற்றும் தான் ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் என அனைத்தும் வெளியான பிறகுதான் திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகைகளைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த பின் சிலர் மட்டுமே சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுப்பார்கள் மற்றவர்கள் குடும்ப வாழ்க்கையை தொடர தொடங்கிவிடுவார்கள். அதனால்தான் என்னவோ இந்த நடிகை வயது எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை தனக்கு படத்தில் நடிப்பது தான் முக்கியம் என அடம்பிடிக்கிறார் என தகவல்கள் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *