உலகில் உள்ள தொழில்நுட்பங்களின் சக்கரவர்த்தியாக கூகுள் விளங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எலான் மஸ்கின் நிறுவனமான ஓப்பன் ஏ ஐ “சார்ட் ஜிபிடி” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸு ம் இணைந்து பெரும் அளவில் முதலீடு செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூகுள் ‘பார்ட்” என்ற செயற்கை நுண்ணறிவு சேவையை அறிமுகம் செய்து உள்ளது.

இது குறித்து நேற்று முன்தினம் கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கூறியதாவது “இந்த சேவையை ஒரு நம்பிக்கை கூறிய சோதனையாளர்கள் குழுவிடம் முதலில் நாங்கள் வழங்குவோம். அதன் பின் பார்டு இந்த ஆண்டு இறுதியில் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்யப்படும். இந்த பார்டு செயற்கை நுண்ணறிவு சேவை ஆர்வத்தினையும் படைப்புத்திறனையும் தூண்டும் வகையில் இருக்கும். அதாவது விண்வெளி போன்ற கடினமான விஷயங்களை கூட குழந்தைகளால் புரிந்து கொள்ளும் வகையில் தான் இந்த பாடு தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.