எல்லாம் இப்படி மாறிபோய் இருக்கு..! திமுக வேட்பாளர் வேண்டுகோள்… வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு வாக்குவாதம்..!!

திண்டுக்கலில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் வரிசைக்கு மாறாக இருந்தால் வாக்குப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர்கள் 1 முதல் 16 வரை முதல் வரிசை மின்னணு இயந்திரத்திலும், 17 முதல் 21 வரை இரண்டாவது வரிசை மின்னணு எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 46-வது வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் 17 முதல் 21 வரை முதல் வரிசையிலும், 1 முதல் 16 வரை இரண்டாவது வரிசையிலும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வேடசந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் காந்திராஜன் நேற்று காலை 11:30 மணி அளவில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வரிசைப்படி மாற்று வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு அதிமுகவினரும், அதிகாரிகளும் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின் அனைத்து கட்சியினரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வரிசைப்படி மாற்றி அமைக்க ஒப்புக் கொண்டனர். இதையடுத்து எந்திரம் வரிசைப்படி மாற்றி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.